Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! சும்மா போயிட்டு இருந்தவங்களுக்கு கத்திகுத்தா…? மர்ம நபரின் வெறியாட்டம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரை மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியிலிருக்கும் எர்பட் என்னும் நகரிலுள்ள சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளர்கள். அப்போது கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மர்ம நபர் குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |