பள்ளி வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய மாடுகள் மற்றும் கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிய பின் கன்றுக்குட்டிகள் தனது வீட்டிலும் மற்றும் பசு மாடுகளை வீட்டின் அருகாமையில் இருக்கும் பயன்பாட்டில் இல்லாத அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் கட்டிப் போட்டு வைத்துள்ளார்.
இதனையடுத்து காலை நேரத்தில் ஜெயா சென்று பார்த்த போது இரண்டு பசு மாடுகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர் பெரியசாமி, ஆய்வாளர் தேவநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இறந்து போன பசுமாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தொடர் கனமழையின் காரணமாக அவை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.