கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பஞ்சரவிளை பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முன் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஜெஸ்டின் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஜெஸ்டினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று 2 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மன வேதனையிலிருந்த ஜெஸ்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெஸ்டினின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.