Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகில் சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிட தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு கட்டிட தொழிலாளியான பஜனைமட வீதியில் வசிக்கும் ரங்கராஜன், கட்டிட பொறியாளர் பிரபு ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அருகிலிருந்தவர்கள் தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆறுமுகம் உடலை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |