Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவிட்டு போயிருக்காங்க…. அதிர்ச்சியடைந்த காண்டிராக்டர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருடியதோடு, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி மிளகாய் பொடி தூவி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் அந்தோணிசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தோணிசாமி தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த கே.கே நகர் காவல்துறையினர் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் காவல்துறையினர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |