கட்டுப்பாட்டை இழந்த கார் செங்கலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயன் தனது குடும்பத்தோடு குடவாசல் பகுதிக்கு சென்னையில் இருந்து காரில் வந்துள்ளார். இதனையடுத்து கல்லாத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த கார் ஆனது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மீது வைக்கப்பட்டிருந்த செங்கல் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் காரில் பயணித்த 2 பெண்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓட்டுநர் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.