Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அமராவதி வனப்பகுதியில் மான்கள், யானைகள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு மலையடிவாரம் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் சின்னகுமாரபாளையம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் யானைகள் கூட்டமாக புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தில் உள்ள குருத்துகளை தின்றன.

இதனை தொடர்ந்து யானைகள் சப்போட்டா பழத் தோட்டங்களில் புகுந்து பழங்களை சேதப்படுத்தியதால் அங்குள்ள விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகுந்து விடாதவாறு இருக்க தேவையான நடவடிக்கைகளை முகாமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் கூறுவதாவது, கிராமத்தில் புகுந்த காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினர்.

Categories

Tech |