Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தஞ்சமடைந்த ஆப்கன் வீராங்கனைகள்…. பல கட்டுப்பாடுகளால் சிக்கி தவிக்கும் பெண்கள்….!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் அந்நாட்டில் தலிபான்கள் விதித்த பல கட்டுப்பாடுகளால் தங்களுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இங்கிலாந்து நாட்டின் உதவியோடு பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் பெண்களுக்கென பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக ஆப்கன் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையே ஆப்கன் நாட்டை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணியின் 32 வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்காக கத்தார் நாட்டிற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் திட்டமிட்ட சமயம் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கன் நாட்டை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணியின் 32 வீராங்கனைகளும் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து நிறுவனத்தின் உதவியோடு பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

Categories

Tech |