Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இறைச்சி விற்பனை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சேவூர் பகுதியில் உள்ள தொட்டி பாளையத்தில் சிலர் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் அன்பரசும், சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுதாகர் மற்றும் சரவணன் என்பதும் அவர்கள் 60 கிலோ காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 60 கிலோ காட்டுப் பன்றி இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் சிறுமுகை வன சரகர்கள் கணேசன், திருமூர்த்தி ஆகியோரிடம் கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் ஒப்படைத்தனர்.

Categories

Tech |