Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. சாலையில் கோர விபத்து…. கதறி அழுத மனைவி….!!

இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கிநாயகன்பள்ளி பகுதியில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சுமதியை அழைத்துக் கொண்டு வெலகல்நத்தம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் தலையில் படுகாயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்த மனைவி கதறி அழுதுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரின் மனைவி சுமதியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |