கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள்கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலியா அரசு அளித்த கட்டுப்பாடுகளால் அந்நாட்டு மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸை பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிக்கித் தவித்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மட்டும் தீவிர நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முதல் அலையில் ஆஸ்திரேலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் சிறப்பான தனிமைப்படுத்துதல் திட்டங்கள், கடுமையான ஊரடங்கு விதிகளை அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அமல்படுத்துதல், மற்றும் எல்லைப்பகுதிகளை மூடுதல் போன்றவை மூலம் வெற்றிகரமாக பரவலை கட்டுப்படுத்தியது. இதனால் 32,594 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளனார்கள்.
இந்த தொற்றிற்கு 916 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இரண்டாவது அலையில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். மேலும் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் ஆஸ்திரேலியா அரசு திணறி வருகின்றனது. அதிலிலும் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா போன்ற இடங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் விக்டோரியா மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் ஆஸ்திரேலியா மக்கள் ஆத்திரமடைந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
மேலும் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்போர்ன் போன்ற நகரங்களில் மக்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் “முககவசத்தை தூக்கி எறிந்துவிட்டு குரலை உயர்த்துங்கள், ஆஸ்திரேலியா மக்களைத் தட்டி எழுப்புங்கள் போன்ற வசனங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போராட்டத்தை கலைக்க முற்ப்பட்ட போலீசாருக்கும் ஆர்ப்பட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பாட்டில்கள், கற்கள் போன்றவற்றை போராட்டக்காரர்கள் போலீசார் மீது வீசியுள்ளனர். இதில் பல்வேறு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் 100க்கும் அதிகமான போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.