கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்.கே.ஜி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் ஜவுளி கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வ.உ.சி. பூங்கா, அம்மாபேட்டை டவுன், புளியம்பட்டி உள்ளிட்ட 24 பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.