பயணகட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது .
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது .அத்துடன் உள்நாட்டு பயணிகளுக்கான விமான போக்குவரத்திற்கும் தடை விதித்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு இன்று முதல் அனுமதி அளித்துள்ளது.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நேபாள நாட்டு அரசு தெரிவித்துள்ளது . இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது .