Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. பள்ளத்தில் பாய்ந்த லாரி…. தர்மபுரியில் பரபரப்பு….!!

தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையில் வசித்து வரும் மனோகரன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் உள்ள சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |