ராணுவ விமான விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரில் ராணுவ விமானம் 14 பயணிகளுடன் பின் ஓ லிவின் என்ற இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அனிசகன் என்ற பகுதியில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் மட்டும் விபத்திலிருந்து தப்பி பிழைத்துள்ளனர். இதில் 2 புத்த துறவிகள் ,6 ராணுவ வீரர்கள் உட்பட14 பேர் இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது . மேலும் இந்த விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர் .