வனப்பகுதில் இருந்து தப்பி வந்த யானையின் தொடர் அட்டுழியத்தால் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை தொடர் அட்டுழியத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 6 ம் தேதி கொத்தூர் பகுதியில் இருக்கும் மோகன் என்ற விவசாயை காட்டு யானை விரட்டியதால் அவர் தப்பி ஓடியுள்ளார். அப்போது கீழே விழுந்த அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று கல்லப்பாடி கதிர்குளம் பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அவருடைய விளைநிலத்தில் நெற்பயிர், தக்காளி போன்றவை விளைவித்துள்ளார். அதனை கண்காணிப்பதற்கு முனிசாமி அவருடைய விவசாய நிலத்தில் இரவு கட்டிலில் உறங்கி கொண்டிந்தார்.
அப்போது அங்கு சென்ற காட்டு யானை அவரை கட்டிலோடு தூக்கி வீசியதில், முனிசாமியின் முதுகு பகுதியில் இருந்து ரத்தம் ஏற்பட்டதால் வலிதாங்க முடியாமல் சத்தம் அவர் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அந்த காட்டு யானை தப்பி ஓடிவிட்டது. அதன்பின் முனிசாமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனிசாமியை காட்டு யானை தாக்கியது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து வன அலுவலர், அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களிடம் இரவில் சிறுத்தை நடமாட்டம் மற்றும் ஒற்றையானை இருப்பதால் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.