Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அச்சுறுத்தும் கொரோனா” காவல் நிலையத்திற்குள் வராதீர்கள்…. பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதித்த போலீசார்….!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூதப்பாண்டி காவல் நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று கடந்த வருடம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு கொரோனா தொற்று இருந்ததால், இரண்டு முறை காவல் நிலையம் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா  தொற்று காரணமாக இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சனிடைசர் வைத்தும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பற்றி சுவர்களில் ஒட்டியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் காவல் நிலையம் வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் கொடுப்பதற்கு வரும் பொதுமக்கள் வெளியில் நின்று மனுக்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |