3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை காவல்துறையினர் போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அனைத்து காவல்துறையினர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பச்சூர் பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பாக சுகாதாரப் பணியாளர்கள் நாற்றம்பள்ளி காவல்நிலையத்திற்கு வந்து அனைவருக்கும் 3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளனர்.