Categories
உலக செய்திகள்

காவலர்களை பிணைக்கைதிகளாக…. பிடித்து வைத்துள்ள கைதி…. பேச்சுவார்த்தை நடத்தும் சிறை ஊழியர்கள்….!!

பிரான்ஸ் சிறையில் 2 காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் வடமேற்கில் உள்ள Conde-sur-Sarthe பகுதியில் அமைந்திருக்கும் சிறையில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது Conde-sur-Sarthe-வில் உள்ள சிறையில் 2 சிறை காவலர்களை கைதி ஒருவர் பிணைக்கைதிகாள பிடித்து வைத்துள்ளார். இந்த செய்தியை பிரான்ஸ் நாட்டின் நீதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “செவ்வாய் கிழமை அன்று கைதி ஒருவர் 2 சிறை காவலர்களை பயங்கரமாக தாக்கியுள்ளார். பின்னர் இருவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு காவலர்களை மிரட்டியுள்ளார்.

குறிப்பாக கைதி நடத்திய தாக்குதலில் சிறைக்காவலர் ஒருவருக்கு வலது கண்ணில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தாக்குதலில் ஈடுபட்ட கைதியிடம் தற்போது சிறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.

மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற இந்த நிலையில் தாக்குதல் நடத்திய கைதி யார்..? மற்றும் அவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் காவலர்கள் யார்..? போன்ற விரிவான விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடவில்லை.

Categories

Tech |