அடகு கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து காவல் நிலையத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஷாராப் பகுதியில் 50-க்கும் அதிகமான நகை அடகு கடைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடகு வைத்தது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணைக்கு வந்துள்ளனர்.
அப்போது கடை உரிமையாளரை காவல்துறையினர் அவதூறாக பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து நகைகளின் அடகு கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் திருமாலிடம் கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு கடை உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.