Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருவீட்டார் எதிர்ப்பு…. காவல்நிலையத்தில் தஞ்சம்…. சமரசம் பேசிய போலீஸ்….!!

இருவீட்டாருக்கும் பயந்த காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமாரும் வாணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தங்கி இருந்துள்ளனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்த காதல் ஜோடி இரு வீட்டாருக்கும் பயந்து காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசி பெண்ணின் ஒப்புதலின் பேரில் காதல் கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |