Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை.. காவல்துறையின் நூதன முறை..!!

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள்  காவல்துறையினர்.

தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது.

திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு எச்சரிக்கைகளுக்கு பிறகும் இளைஞர்கள் சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு தோப்புக்கரணம், தண்டால், ரவுண்டானாவில் சுற்றி வருதல், நாற்காலி ஆசனம் போட வைத்தல் என ரக ரகமான தண்டனைகளை போலீசார் வழங்கி வந்தனர். அதையும் மீறி இளைஞர்களின் ஊர் சுற்றும் வெறி அடங்காத தான் தற்போது நூதன தண்டனை முறையை கையில் எடுத்துள்ளனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வியாழன் அன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய இரு இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கினர். அந்தப்பகுதி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவுக்கரசர் அவர்களிடம் ஒரு பச்சை மிளகாயை கொடுத்து கடித்து சாப்பிடச் சொன்னார். அவர்கள் தயங்கியபோது கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி எடுத்துரைத்தார்.

மீண்டும் பச்சைமிளகாயை கடித்து சாப்பிட சொன்னார். அவர்கள் ஒரு கடி கடித்து விட்டு தவித்த போது அவர்களிடம் கடலை மிட்டாய் கொடுத்து அதை சாப்பிட சொன்னார். அதையடுத்து மீண்டும் அவர்களுக்கு அறிவுரை கூறி வெளியில் தெரிய வேண்டாம் என எச்சரிக்கை கூறி அனுப்பி வைத்தார்.

இளைஞர்களும் இனி தாங்கள் வெளியில் வரப்போவது இல்லை என உறுதி கூறி அங்கிருந்து சென்றனர். தேவையில்லாமல் வெளியில் திரிந்தால் சிறை தண்டனை, அபராதம் போன்றவை கிடைக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் சுற்றுவது நிற்கவில்லை இந்த பச்சைமிளகாய் தண்டனை ஆவது பயன் அளித்தால் சரிதான்.

Categories

Tech |