Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அநியாயம் பண்றாங்க…. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. காவல்துறை சூப்பிரண்டிடம் மனு….!!

கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக காவல்துறை சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, நெமிலி தாலுக்கா வேகாமங்களம் கிராமத்தில் நான் வசித்து வருகிறேன். அரக்கோணத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறேன். அதன்பின் வீடு கட்டும் பணிக்காக சிலரிடம் பணம் வாங்கியுள்ளேன்.

இதனை அடுத்து வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டேன். இருப்பினும் கடன் தொகைக்கு அதிகமாக தினசரி மீட்டர் வட்டி என கூறி எனது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றை கடன் கொடுத்தவரின் கும்பல் எடுத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பணம் கேட்டு எனது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். ஆதலால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்து இருக்கிறோம். மேலும் பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டிக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌ என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |