Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“என் பணத்தை வாங்கி தாங்க” தீக்குளிக்க முயற்சி செய்த நபர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் சிப்காட் முகவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பாக வந்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த இடத்தில் பிரச்சனை உள்ளதாகவும், அதனால் அந்த நிலத்தை மீண்டும் அதன் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறியுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக அக்ரிமெண்ட் போட்டு தனக்கு தர வேண்டிய ஒரு கோடியே 8 லட்ச ரூபாயை தரவில்லை.

ஆதலால் எனது பணத்தை பெற்றுத் தர கோரி காவல்துறை சூப்பிரண்டு அலுவலக குற்றப்பிரிவில் செந்தில்குமார் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் அளித்த புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செந்தில்குமாரை அழைத்து சென்று காவல்துறை சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக எளிதில் தீ பிடிக்க கூடிய பொருளை அஜாக்கிரதையாக கையாண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |