Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி தாங்க…. கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும்…. அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்….!!

அரசு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற ஒத்துழைக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சதுர்த்தி விழாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கியுள்ளார். அப்போது பொதுமக்களின் பொதுநலன் கருதி விழாக்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பின் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்காத நிலையில் மாநில அளவிலான பல துறைகளுடன் ஆலோசித்து பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து இரண்டாவது அலையில் எந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை நினைவில் கூர்ந்து அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பாரம்பரியமாக கொண்டாடப்படுகின்ற விழா. இதனால் இந்த விழாவை கொண்டாட தடை விதிக்க கூடாது எனவும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் தெரிவித்திருந்தனர்.

Categories

Tech |