Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்  ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் வசித்துவரும் புருஷோத்தமனின் மகன் அப்பு என்ற பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 2 1/2 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |