ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி முதல் அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது சந்தேகத்தின்படி அந்த பெட்டியில் இருந்து இரண்டு வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த முனியப்பா, முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சோளிங்கர் பகுதிக்கு மது பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 162 பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து முனியப்பா, முருகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.