Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் தப்பிக்க முடியாது…. கட்டுப்பாடுகளை மீறவே கூடாது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகளை திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் முககவசம் அணியாத 333 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 23 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஒரே நாளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினர் மொத்தம் 78 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

Categories

Tech |