Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித்திரிந்த வாலிபர்கள்…. நடைபெறும் கண்காணிப்பு பணி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது விக்கிரபாண்டியம், கோட்டூர், திருக்களார், களப்பால், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை போன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் வெளியில் சுற்றித்திரிந்த 22 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |