Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் மயங்கி கிடந்த மனைவி…. அதிர்ச்சியடைந்த கணவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் சபரிநாதன்- தரணி தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுகின் என்ற மகன் இருக்கின்றான். இதில் சபரிநாதன் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மகனை அழைத்துக் கொண்டு ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து மகன் சுககினை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சபரிநாதன் மற்றும் அவரது மனைவி தரணி தேவி இருவரும் ஆத்தூரிலிருந்து அந்தியூருக்கு காரில் சென்றனர். அதன்பின் மாலை வேளையில் குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் பகுதியில் வந்தபோது சபரிநாதன் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினார்.

அதன்பிறகு சபரிநாதன் சிறுநீர் கழித்துவிட்டு வந்து பார்த்தபோது தரணி தேவி காரில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து சபரிநாதன் மனைவி தரணி தேவியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தாக்கூர் கோட்டைமேடு பகுதிக்கு சென்று சபரிநாதனிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சபரிநாதன் பின் முரணான தகவலை கூறியதால் பிரேத பரிசோதனை முடிவில் இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |