கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விஜயலிங்கம்- மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வாலாஜாபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி கணவர் விஜயலிங்கம் இறந்துவிட்டதாக மல்லிகாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மல்லிகா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.