வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தியாகராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சென்னையில் உள்ள அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தியாகராஜன் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்னர். இவ்வாறு உத்திரமேரூர் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.