Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்தால் சந்தேகமா இருக்கு…. சரியான ஆவணம் இல்லை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரெயிலில் 2 நபர்கள் சரியான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட வெள்ளியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு 5-வது பிளாட்பாரத்தில் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு எர்ணாகுளம்- பிலாஸ்பூர் (08228) சிறப்பு ரயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அந்த ரயிலில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது சுரங்கப் பாதையில் செல்வதற்கான வழியில் சந்தேகப்படும்படி 2 நபர்கள் பைகளுடன் இருந்ததை கண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் வைத்திருந்த பையில் வெள்ளி பொருட்கள் இருப்பது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்று அந்த நபர்களிடம் காவல்துறையினர் கேட்டபோது ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 28.9 கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையின் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஜாபர் உசேனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைப்பற்றிய வெள்ளியின் மதிப்பு 19 ஆயிரத்து 94 ஆயிரத்து 100 ரூபாய் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் கூறியுள்ளனர் .

Categories

Tech |