பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது நாட்டில் இருவருக்கு தலைவனாக்குவதாக குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்தார். அதில் பிரதமர் மோடி நாட்டில் 2 பேருக்கு நான் தலை வணங்குகின்றேன் என்ற முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு பேசினார். அதனை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். பிரதமர் மோடி சொன்ன அந்த இரண்டு பேர் யார் என்பதற்கான சிறிய நினைவூட்டலாக இந்த செய்தி தொகுப்பு அமையும்.
பிரதமர் மோடி பேசியதில், அரசு இன்று தேவைப்படுவோருக்கும், ஏழை மக்களுக்கும் இலவச உணவு பொருட்களை வழங்க முடிகிறது என்றால் அதற்கு இரண்டு தரப்பினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முதலாவதாக கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகள். இரண்டாவதாக நேர்மையான முறையில் வரி செலுத்தும் நமது நாட்டு மக்கள் ஆகிய இரு தரப்பினரே அரசின் இந்த முன் முயற்சிக்கு காரணமாக விளங்குகிறார்கள். உங்களுடைய கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் தான் இந்த அரிய செயலைச் செய்ய உதவியுள்ளன. தேசத்தின் உணவுப்பொருள் கிடங்குகளை நீங்கள் கடுமையான உழைப்பால் நிறைத்து இருக்கிறீர்கள்.
அதனால் ஏழை மக்கள், பணியாளர்கள் ஆகியோரது சமையலறைகளில் உணவு கிடைக்க ஏதுவாக உள்ளது. நேர்மையான முறையில் வரி செலுத்தியதன் காரணமாக நீங்கள் இந்த நாட்டுக்காக கடமையை ஆற்றி உள்ளீர்கள். அதனால்தான் இந்த நாட்டில் ஏழை மக்கள் வெற்றிகரமாக இத்தகைய மிகப்பெரும் இடர்பாடுகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது. இந்த தேசத்தின் மக்களின் சார்பாக வரி செலுத்துவோருக்கும், விவசாய பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இப்படி பிரதமர் நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது, விவசாயிகள் மற்றும் வரி செலுத்துவோரை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.