Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்கள்… கெட்ட வார்த்தையால் திட்டிய லட்சுமி மேனன்…!!!

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை நடிகை லட்சுமி மேனன் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி ,சுந்தரபாண்டியன் ,மஞ்சப்பை, ஜிகர்தண்டா ,பாண்டியநாடு ,வேதாளம், கொம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு மற்றும் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை  வழக்கமாக வைத்துள்ளார் . சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலுக்கு ‘மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது. நான் அங்கு செல்ல மாட்டேன்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

I'm not on Twitter: Lakshmi Menon | Entertainment News,The Indian Express

இதையடுத்து லட்சுமி மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ‘யாரையாவது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகுங்கள்’ என்று கூறியதற்கு பதிலடி கொடுத்தார் . இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லட்சுமி மேனனிடம் சில ரசிகர்கள் கவர்ச்சி புகைப்படங்கள் கேட்டுள்ளனர் . இதைப் பார்த்த லட்சுமி மேனன் அவர்களை கெட்டவார்த்தையால் திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |