தமிழக முதல்வரின் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நீராதாரங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் நீர் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆகியவற்றின் நிதி உதவியை பயன்படுத்தி சென்னை ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து நீர் மாசடைந்துள்ளது என்று தெரியவந்தது.
இதனிடையே ஈரோடு குமாரபாளையம், பள்ளிபாளையம், கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவு நீர்கள் காவேரி நதிகளை கலக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழக அரசு 5 குழுக்களை அமைத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை பல்வேறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் கலந்துள்ள மாசுகட்டுபாட்டு களே தடுப்பதற்கு சென்னை ஐஐடி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுனர்கள் ஆலோசனை செய்து பிறகு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.