பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சித்து அதனையடுத்து பலரும் காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக்கோரிக்கைகளை ஏற்று இன்று சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.