கடலூர் அருகே மதுபாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் மொத்த டாஸ்மாக் குடோன் ஒன்று இருந்து வருகிறது. நேற்றைக்கு அங்கிருந்து மதுபானங்களை லாரியில் ஏற்றி அதே பகுதியில் இருக்கக்கூடிய மதுபான கடைகளுக்கு சரக்குகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதுபானம் கடைக்கு அருகில் செல்லும்போது, திடீரென ஒரு லாரி மதுபானங்கள் ஏற்றி செல்லும் லாரி மீது மோதியது. இதனால் அந்த லாரி வாய்க்காலில் சரிந்து விழுந்து, லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரி டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு லாரி சரிந்து விழுந்தும் மதுபானங்கள் சேதமடையாததால் அதனை கடைகளுக்கு மாற்றும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டார்கள்.மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.