சிவகாசி பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு பின் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி இவர் யார்…? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.