Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் எவிக்சன் கார்டுடன் வந்த கமல்… மூவரில் யார் வெளியேற போகிறார்?… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு நபர்கள் இருக்கும் நிலையில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இவர்களில் சோம், ஆரி ,ரியோ ,பாலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில் மீதம் இருக்கும் சிவானி, ரம்யா, கேபி இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ‘மூன்று மகளிரில் இன்று வெளியேறப் போவது யார்?’ என்று கமல் கேட்கிறார். இதையடுத்து கமல் கேட்ட கேள்விகளுக்கு போட்டியாளர்கள் மௌனமாக இருந்ததால் கையிலிருந்த எவிக்ஷன் கார்டை திறக்கிறார் கமல். மேலும் சமூக வலைத்தளங்களில் ஷிவானி வெளியேறியதாக தகவல் பரவி வரும் நிலையில் இன்று வெளியேறப் போவது யார் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.

Categories

Tech |