நடிகர் அஜித் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார் .
மேலும் சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக வழி மாறி வந்த அஜித் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் கையில் துப்பாக்கியுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது அவரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது .