இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது; “எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்றால், இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம் என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக் கேவலப்பட்டு நிற்கும். இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்…”
இவ்வாறு அவர் கடும்கோபத்தோடு சாடியுள்ளார்..