கணவனும் மனைவியும் சேர்ந்து தொழிலாளியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் பல வருடங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணியில் கருப்பண்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அசோகனும் அவரது மனைவி செல்வியும் கருப்பண்ணனை குடிநீர் குழாயை அமைக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் கருப்பண்ணனுக்கும் தம்பதியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அப்போது ஏற்பட்ட தகராறில் கணவனும் மனைவியும் சேர்ந்து கருப்பண்ணனை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கருப்பண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கருப்பண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்து விட்டு தலைமறைவான அசோகனையும் செல்வியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.