சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸானது உலக அளவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்றால் அதுதான் லாக் டவுன். இதன்படி, 20 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கவேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என்பதே.
சிங்கப்பூரில் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பாதுகாப்பாக இருந்தால் போதும், என்ற அறிவுரையை அந்நாட்டு அரசு வழங்கியதையடுத்து பொதுமக்கள் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கான காரணம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாத சிறை தண்டனையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் கொரோனாவை அலட்சியமாகக் கருதி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.