கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது
பதினாறாம் நூற்றாண்டுகளில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படை தலைவர்களை குஞ்சாலி மரைக்கார் என அழைத்தனர். அவர்களில் நாலாவது குஞ்சாலி மரைக்கார் மிகுந்த வீரம் நிறைந்த வராக போற்றப்பட்டார். அந்த குஞ்சாலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. தயாராகும் திரைப்படத்தில் குஞ்சாலி மரைக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
100 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இத்திரைப்படம் மார்ச் மாதம் 26ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், உட்பட ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் முதலானோர் முக்கிய வேடத்தில் நடிப்பை வெளிக் காட்டி உள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் ஆர்ச்சா எனும் வேடத்தில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கேரளத்தின் பாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ் தோற்றமளிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.