Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரனை கொஞ்சும் கீர்த்தி பாண்டியன்…. குவியும் லைக்ஸ்…!!!

நடிகை கீர்த்தி பாண்டியன் அசுரன் காளை மாட்டை கொஞ்சும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் தனது தந்தையுடன் இணைந்து நடித்த அன்பிற்கினியாள்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரது வீட்டில் புதிதாக பிறந்துள்ள கன்றுக்குட்டியை கொஞ்சும் புகைப்படத்தை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் 2021 ஆம் ஆண்டு பொங்கல் அன்று பிறந்த மற்றொரு புதிய குடும்ப உறுப்பினரை சந்திக்கவும். அசுரன் காளை மாடு. மேலும் அவரது காதுகளை பாருங்கள். ஒரு நாள் அவர் அவற்றைப் பயன்படுத்தி பறக்கப் போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CNz00FJL1ep/?igshid=cz38k0unsiyh

Categories

Tech |