பிரபல இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ரூ. ஒரு கோடி வாங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் “உப்பெனா” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு அந்தப் படத்தில் விஜய்சேதுபதி அப்பாவாக நடித்துள்ளார். இதையடுத்து கீர்த்தி ஷெட்டி இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் மூலம் தமிழிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கீர்த்தி ஷெட்டி ரூபாய் ஒரு கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.