நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் களமிறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் குறைந்ததால் இவரும் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அதன்படிகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான ‘ரங்தே’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனுடன் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். குறிப்பாக அவர் இப்படத்தில் கதாநாயகன் நிதினுயுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்ப குத்து விளக்கான கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சியில் களமிறங்கி விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.