நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட உள்ளது .
66 வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் முழு விபரங்களை கீழே காண்போம்:
சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)
சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்)
சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ்
சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)
சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி
சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் – மராத்தி)
சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ – ஹிந்தி)
சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)
சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங்(பத்மாவத்)
சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி – கன்னடம்)
சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)
சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)
சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி – கன்னடம்)
சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி – தெலுங்கு)
சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே – தெலுங்கு)
சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே… – படம் நதிசராமி – கன்னடம்)
சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) – கேஜிஎப்(கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு – மலையாளம்)
இந்நிலையில் , தமிழில் சிறந்த படமாக ‘பாரம்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தேசிய விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ‘பேரன்பு’ மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.