தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இந்தண்டு கடைசியாக வெளியான திரைப்படம் ‘குட்லக் சகி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன.
Our next single with @SonyMusicSouth and this time with our @KeerthyOfficial
Really excited for this.Releasing tomorrow !! @TheRoute @BrindhaGopal1 @pawanch19 @Ananyabhat14 @dop_harish @SibiMarappan @kabilanchelliah pic.twitter.com/HBFy0sMBMN
— Jagadish (@Jagadishbliss) February 20, 2022
இந்நிலையில், இவர் நடிப்பில் பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் காந்தாரி மியூசிக் தயாராகியுள்ளது. பிருந்தா மாஸ்டரின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வீடியோவுக்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த பாடலின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.